கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் தெலங்கானா தோட்டக் கலைத் துறை சார்பாக மாநில அஞ்சல் துறையினருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா தோட்டக் கலைத் துறை மேலாளர் பெங்கட் ரெட்டி பேசுகையில், ''கோடைக் காலத்தில் மாம்பழங்கள் சீசன் தொடங்கும் நிலையில், பொதுமக்கள் மாம்பழங்கள் வாங்க வெளியே வரவேண்டாம். பொதுமக்கள் மாம்பழங்கள் வேண்டுமென்றால் ஆர்டர் செய்த 4 முதல் 5 நாள்களுக்குள் வீட்டில் வந்து கொடுக்கப்படும்.
இந்த மாம்பழங்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு, 5 கிலோவாக ஒரு பெட்டியில் வைத்து அடைக்கப்படும். 5 கிலோவில் 12 முதல் 15 பழங்கள்வரை இருக்கும். இதனைப் பெறுவதற்கு மக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் செயலி மூலம் ஆர்டர் செய்தால் போதும். பழத்திற்கான கட்டணங்கள் மாம்பழத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். ஆர்டர்கள் காலை 9 மணி முதல் 5 மணிவரை எடுத்துக்கொள்ளப்படும். மாம்பழத்திற்கான கட்டணங்களை ஆன் லைனிலும் செலுத்தலாம் '' என்றார்.
அலைபேசி எண்கள் : 79977 24925, 79977 24944.
இதையும் படிங்க:ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்