ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே கெரி செக்டாரில் இன்று மாலை நான்கு மணியளவில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் தடுத்து நிறுத்தம்! - வெடிகுண்டு செயலிழக்கச் செய்த பாதுகாப்புப் படையினர்‘
ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லைக்கோடு அருகே பெரும் வெடிகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது.
JK attack averted
அப்போது, அந்த வழியில் சந்தேகப்படும்படியான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர். பின் வாகனத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது, அது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது. பின்னர், அதனைச் செயலிழக்கச் செய்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜக எடுத்த மோசமான முடிவு - தேவே கவுடா