உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எரிவாயு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.