ஜம்மு- காஷ்மீர் மண்டல காவல் துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
புல்வாமாவில் வெடிகுண்டு சதித்திட்டம் முறியடிப்பு! - புல்வாமாவில் வெடிகுண்டு சதித்திட்டம்
புல்வாமா: மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, காவல் துறையின் துரிதமான நடவடிக்கையால் வாகனங்களில் குண்டு வைத்து வெடிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
Pulwama
கடந்த சில நாள்களாகவே எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டுவரும் இச்சூழலில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’