தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 9 பேர் பத்திரமாக மீட்பு! - Aditya Arcade

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தவித்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Major fire breaks out in Mumbai

By

Published : Oct 13, 2019, 12:57 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கிராண்ட் சாலையில், 'ஆதித்திய ஆர்கேடு' என்ற பெயரில் 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் மற்றும் ஒன்றாவது மாடியில் இந்த தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிருக்குப் போராடினர்.

மும்பை தீ விபத்து காணொலி
அவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர். சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும், தீ விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details