தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராய்காட் தனியார் ஆலையில் பயங்கர தீ விபத்து! - சுதர்சன் நிறுவனம்

ராய்காட்: ரோஹா எம்ஐடிசியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சுதர்சன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

fire accident
fire accident

By

Published : Nov 12, 2020, 9:46 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் ரோஹா எம்ஐடிசியில் அமைந்துள்ள சுதர்சன் நிறுவனத்தில் இன்று (நவ.12) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மளமளவென பற்றி எரியும் தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மளமளவென பற்றி எரியும் நெருப்பு

இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேறிக்கு 14 நாள் காவல்

ABOUT THE AUTHOR

...view details