தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வாம்மா கிரண்பேடி வெளியே... எங்க மாநிலத்த நோகடிச்ச கிளியே...' - mahila congress protest against gas price increase

புதுச்சேரி: சிலிண்டர் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் பாட்டு பாடி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

mahila congress
mahila congress

By

Published : Feb 25, 2020, 8:08 AM IST

மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும், புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மகிளா காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சமையல் சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும், சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து, பாட்டு பாடி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள், “வாம்மா கிரண்பேடி வெளியே... எங்க மாநிலத்த நோகடிச்ச கிளியே”, ”எங்களை ஆட்டிப்படைக்கும் தேவியே” போன்ற வரிகளைப் பாடி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பெண்கள் பாட்டு பாடியதற்கிணங்க முதலமைச்சரும் அமைச்சரும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

இதையும் படிங்க:'நிதி அதிகாரத்தில் தனக்கே பெரும் பொறுப்பு' - ஆளுநர் கிரண்பேடி

ABOUT THE AUTHOR

...view details