கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. நிதியமைச்சராக தாமஸ் ஐசக் பொறுப்பு வகிக்கிறார். இவர் இன்று மாநிலத்தின் வரவு-செலவு திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் முகப்புப் பக்கத்தில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலையை நினைவுபடுத்தும் காட்சி ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. பிரபல ஓவியர் வரைந்த அந்த ஓவியம் மகாத்மா காந்தியின் படுகொலையை, நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் மிக்கது.
கேரள பட்ஜெட் அறிக்கையில் மகாத்மா படுகொலைக் காட்சி - உருவான புதிய சர்ச்சை - கேரள பட்ஜெட் அறிக்கையில் மகாத்மா படுகொலை காட்சி
திருவனந்தபுரம்: கேரளாவின் வரவு - செலவு திட்ட அறிக்கையில் (பட்ஜெட்), மகாத்மா காந்தியின் படுகொலைக் காட்சியை நினைவு கூரும் வகையில் ஓவியக் காட்சி இடம்பெற்றுள்ளது.
மாநிலத்தின் வரவு - செலவு திட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படும் காட்சி ஓவியம் இடம்பெற்ற சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் தாமஸ் ஐசக், 'இது மிகவும் முக்கியமான நேரம். இல்லையென்றால் நமது வரலாறு மாற்றப்படும். பிரபலமான நினைவுகளை அழிக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு மக்களை மத ரீதியாகப் பிரிக்கும்.
ஆனால், கேரள அரசு என்றென்றும் ஒற்றுமைக்குத் துணை நிற்கும்' என்றார். தற்போது இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் உயர்கிறது?