தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மங்களூருவில் மகாத்மா காந்தி கோயில்! நாள்தோறும் தேச'பக்தர்கள்' வழிபாடு - gandhian priciples temple

மங்களூரு: மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை மக்களுக்கு பரப்புவதற்காக கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு கோயிலில் காந்திக்கென தனி பிரகாரம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.

மங்களூருவில் மகாத்மா கோவில்

By

Published : Aug 16, 2019, 9:40 AM IST

அமைதியை பரப்புதல், அகிம்சை முறை, வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் போன்ற காந்தியடிகளின் கொள்கைகளை மக்களுக்கு பரப்புவதற்காக கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கரோடி பகுதியில் ஸ்ரீ பிரம்ஹா பைதர்கலா க்ஷேத்ரா கோயிலில் தேசப்பிதா காந்தியடிகளுக்கென தனி பிரகாரம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.

பக்தர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மகாத்மா காந்தியை வழிபாடு செய்வதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இங்கு வரும் பக்தர்களுக்கு தேநீர் உள்ளிட்ட பானங்களும் பழங்களும் வழங்கப்பட்டுவருகின்றன.

1948ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலில் இளைஞர்கள் காந்தியக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் 2006ஆம் ஆண்டு அவரது சிலை மீண்டும் வடிவமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இங்கு வரும் பக்தர்கள் பொதுவெளியில் தூய்மையைக் கடைப்பிடிக்க ஏதுவாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details