இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட கோடிக்கணக்கான இந்தியர்களை அகிம்சையின் வழியில் ஒன்றிணைத்த மகாத்மா காந்தியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் கடற்கரையிலுள்ள காந்தி சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மகாத்மா காந்தி நினைவுநாள் - துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மரியாதை - காந்தி நினைவு நாள்
புதுச்சேரி: மகாத்மா காந்தி நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
memorial
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு கட்சித் தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாகப் புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை வரை சென்றனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உத்தமர் காந்தி நினைவு நாள்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு