நிமிடத்திற்கு நிமிடம் மகாராஷ்டிராவில் அரசியல் சூழ்நிலை மாறிவருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால், சிவசேனா ஆதரவு தர மறுத்ததால் ஆட்சி அமைக்க பாஜக மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இறுதிவரை ஆதரவு குறித்த முடிவை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காலஅவகாசம் கேட்டு சிவசேனா, ஆளுநர் மாளிகையை அணுகியது.