மகாராஷ்ட்ரா மாநிலத்தில், சோலாப்பூரில் பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர் ஒருவரின் கேபில் இணைப்பின் நிலுவை தொகை கட்டுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணை பிரிவு பொறியாளரை சந்திக்க வந்துள்ளார். அப்போது அவர் அந்த பணியை முடித்து தர 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்தாக தெரிகிறது.
லஞ்சம் கேட்ட பிஎஸ்என்எல் ஊழியர் கைது! - cbi
மும்பை: மகாராஷ்டிராவில் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவரை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிஎஸ்என்எல்
இதனால் இந்த பொறியாளர் மீது பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், சிபிஐ அலுவலர்கள் பொறியாளரின் அலுவலகம், வீடு என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களையும் சோதனை செய்தனர். அதில் லஞ்சம் பெற்றதற்கு உறிய ஆவணங்கள் சிக்கியதால் மீது லஞ்சம் ஒழிப்பு சட்டம் 1988 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.