மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.
இவ்வழக்கில் சிவசேனா சார்பாக கபில் சிபல், மத்திய அரசு சார்பாக அரசு துணை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் முகுல் ரோத்தகி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.