தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டமுன்வடிவுகள்: இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா மகாராஷ்டிரா கூட்டணி அரசு! - சந்தைப்படுத்தல் அமைச்சர் பாலாசாகேப் ஷம்ரா பாட்டீல்

மும்பை: மத்திய அரசின் வேளாண் சட்ட முன்வடிவுகளின் ஆணைகள் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்றே மகாராஷ்டிராவில் நடைமுறைக்கு வந்திருப்பது அரசின் அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.

வேளாண் சட்டமுன்வடிவுகள் : இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா மகாராஷ்டிரா கூட்டணி அரசு!
வேளாண் சட்டமுன்வடிவுகள் : இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா மகாராஷ்டிரா கூட்டணி அரசு!

By

Published : Sep 28, 2020, 10:01 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை மீறி மத்திய அரசு வேளாண் தொடர்பான நான்கு சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி உள்ளது.

இந்தச் சட்ட முன்வடிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாய இயக்கங்கள், எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில், சட்ட முன்வடிவுகளைக் கடுமையாக எதிர்த்துவரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அங்கம் வகிக்கும் சிவ சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்றே அம்மாநிலத்தில் அதன் ஆணைகளை நடைமுறைப்படுத்த அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வேளாண் உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்தல் துறை இயக்குநர் சதீஷ் சோனி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "அனைத்து வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தைக் குழுக்கள் (ஏபிஎம்சி), மாவட்ட வேளாண் கூட்டுறவு நிறுவனங்கள் முன்மொழியப்பட்ட உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளின் ஆணைகளை கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் " என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தத் துறையின் இயக்குநர் ​​சோனியிடம் பேசியபோது, அது பற்றி மேலும் கருத்து தெரிவிக்க முடியாதென மறுத்துவிட்டார்.

இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) சந்தைப்படுத்தல் அமைச்சர் பாலாசாகேப் ஷம்ரா பாட்டீலிடம் வினவியபோது, "முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் இப்போது துணை முதலமைச்சர் அஜித் பவாரின் சமீபத்திய அறிக்கையின் பின்னர் நிலைமை வேறுபட்டது" என பதிலளித்தார் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details