தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2020, 7:49 PM IST

ETV Bharat / bharat

பள்ளி வளாகத்தில் விவசாயம்: குடிபெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்!

பால்கர்: பிழைப்புக்காகக் கிராமத்தைவிட்டு வெளியேறும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக, பள்ளி வளாகத்தில் விவசாயம் மேற்கொள்ள ஆசிரியர் ஒருவர் ஏற்பாடு செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்
ஆசிரியர்

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டம் டோல்ஹரி புத்ரூக் கிராமத்தில் அமைந்துள்ளது ஜில்லா பரிஷத் என்ற அரசுப் பள்ளி. இதில் ஆசியராகப் பணியாற்றிவருகிறார், பாபு ஷங்தேவ் மோர். இவர், தான் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் சந்தோஷ் பட்டிலின் உதவியுடன் விவசாயம் மேற்கொண்டுவருகிறார்.

பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மோர், கடந்த 2016ஆம் ஆண்டில் தாலுகா நிர்வாகத்துடன் இணைந்து இந்தப் பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். இதன் மூலம் மாணவர்களிடையே விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது இந்த விவசாயப் பணிகளில் அவ்வூரைச் சேர்ந்த குடும்பங்களையும் இணைத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஷங்தேவ் மோர், “டோல்ஹரி கிராமத்திலிருந்து 35 குடும்பங்கள் செங்கல் சூளை, கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபட மும்பை, பிவாண்டி, வசாய் போன்ற நகரங்களுக்குக் குடிபெயருகின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. இந்த இடம்பெயர்வால் குழந்தைகளின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து அவர்களின் பெற்றோரிடம் பேசினேன். அவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க ஒரு வேலை தேவையாக இருந்தது. அதற்கு நான் உத்தரவாதம் அளித்தேன். நானும், ஆசிரியர் சந்தோஷும் பள்ளி வளாகத்திலேயே விவசாயம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தோம். இங்கு வெங்காயம், கத்தரிக்காய், கீரை, வெந்தயம், இஞ்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றைப் பயிரிடுகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: ‘கரோனாவை விட பட்டினியால் இறந்துவிடுவோம்’ - மதிய உணவு கிடைக்காத மாணவர்களின் கண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details