தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2020, 2:17 AM IST

ETV Bharat / bharat

தொடர்ந்து குறையும் கரோனாவின் தாக்கம்!

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Corona
Corona

கடந்த ஏழு மாத காலமாக, நாட்டையே இன்னலுக்குள்ளாக்கிய கரோனா வைரஸ் நோயின் ருத்ர தாண்டவம் தற்போது குறைந்து வருகிறது. குறிப்பாக, நாட்டிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதன் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

18 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் பேர் வரை ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 5 ஆயிரம் என்னும் அளவில் குறைந்துள்ளது. 3,645 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருவாரியான நோய் எதிர்ப்புச் சக்தி மக்களிடையே வளர்ந்து இருக்கும் என சிலர் கூறி வரும் நிலையில், சுகாதாரத்துறை நிபுணர்கள் அதனை மறுத்துள்ளனர்.

கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஆகியவையே பெருந்தொற்று குறையக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதுமே அதன் தாக்கம் குறைந்து வருவதைக் கணக்கில் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 95 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது தோராயமாக 55 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் அவினாஷ் கூறுகையில், "பெருவாரியான நோய் எதிர்ப்புச் சக்தி என்பது 70 விழுக்காட்டிற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருந்தால் தான் மக்களிடையே வளரும். 91 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் தான், இந்த பெருவாரியான நோய் எதிர்ப்புச் சக்தி என்பது மற்றவர்கள் இடையே வளரும். ஆனால், 4 கோடி பேர் மட்டுமே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அதற்கு வாய்ப்பில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details