தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யார் யாருக்கு எந்தெந்தத் துறை? - சூடுபிடிக்கத் தொடங்கிய மகா. அமைச்சரவை! - மகாராஷ்டிரா அமைச்சரவை ஒதுக்கீடு பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்தத் துறைகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Maharashtra Portfolio Allocation meeting
Maharashtra Portfolio Allocation meeting

By

Published : Jan 3, 2020, 10:54 AM IST

பல அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியான 'மகா விகாஸ் அகாதி' மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் உள்பட 36 பேர் அமைச்சராகப் பதவியேற்றனர்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது சூடுபிடித்துள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணியை உருவாக்கி ஆட்சியமைப்பதற்கு மூளையாகச் செயல்பட்ட சரத் பவாரின் கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு அதிகளவிலான அமைச்சர் பொறுப்புகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுவருகிறது.

அதன்படி, துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித் துறையும் ஜெயந்த் பாட்டிலுக்கு நீர்ப்பாசனத் துறையும் ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும், காங்கிரஸ் தரப்பில் அசோக் சவானுக்கு பொதுப்பணித் துறையும் பாலாசாஹேப் தோரட்டுக்கு வருவாய்த் துறையும் கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்தன.

நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் அசோக் சவான், பாலாசாஹேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அஜித் பவார், சிவசேனா தரப்பில் ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், காங்கிரஸ் தனக்கு 12 அமைச்சர் பொறுப்புகளைக் கேட்டதாகவும், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த 2 துறைகளையும் சேர்த்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சவான், "முதலமைச்சரிடம் எங்கள் தரப்பு கோரிக்களைக் கூறியுள்ளோம். அதற்கு அவர் நல்ல முடிவை கூடிய விரைவில் அளிப்பார்" என்றார்.

இதையும் படிங்க: 'அம்பேத்கர் மணிமண்டபம் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்' - அஜித் பவார்

ABOUT THE AUTHOR

...view details