தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரதிய ஜனதாவுக்கு ராஜ் தாக்கரே அடுக்கடுக்கான கேள்வி! - மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் நிறுவன தலைவர் ராஜ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே பாரதிய ஜனதா தலைவர்களை விமர்சித்து சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Raj Thackarey

By

Published : Oct 13, 2019, 6:15 PM IST

ராஜ் தாக்கரே:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தின் பிவாண்டி, கல்யாண் பகுதிகளில் ராஜ் தாக்கரே பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 'மகாராஷ்டிராவில் பல பிரச்னைகள் உள்ளது. உழவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாலைகள் படுமோசமாக உள்ளன. ஆனால், பாரதிய ஜனதா தலைவர்கள் என்ன சொல்கின்றனர்? எதைப் பற்றி பேசுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்தை பெரிதாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார். மாநில பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மாநில மக்களின் பிரச்னையைத் தீர்க்க பாரதிய ஜனதா தலைவர்கள் எந்தவொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.

பட்டேல் சிலை விவகாரம்:
அரபிக் கடலில் மாமன்னர் வீரசிவாஜிக்கு சிலை அமைப்போம் என்றனர். ஆனால் அமைத்தார்களா? இன்று வரை அமைக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிலையை அமைத்து விட்டது போன்றே கூறி வருகிறார். ஆனால் இன்றுவரை அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. குஜராத்தில் பட்டேல் சிலையும், வீரசிவாஜி மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் தானே அறிவிக்கப் பட்டன?
ஆனால், குஜராத் பட்டேல் சிலை திறப்பு விழா கண்டு விட்டது. வீரசிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் பணி என்னானது? சீன உணவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், பட்டேல் சிலையை சீனாவில் உருவாக்குவார்கள். பட்டேல் சிலை, சீனாவில் உருவாக்கப்பட்டது. அச்சிலை 'மேடு இன் இந்தியா அல்ல, மேடு இன் சீனா'!

சரமாரி கேள்வி:
மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, அனைவரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கடந்த ஆண்டு குஜராத்தில் என்ன நடந்தது? உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், எவரும் கேள்வி எழுப்பவில்லை. ஏன்? ஒருவர் கூட இதுதொடர்பாக பேசவில்லை. நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். எங்களின் போராட்டம் மக்களுக்கானது. மகாராஷ்டிரா மண்ணுக்கானது. எங்களின் நோக்கம் மராத்தியர்களின் வளர்ச்சியே.!'இவ்வாறு கூறினார்.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வருகிற 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

'மகாராஷ்ட்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதலமைச்சராகும் காலம் விரைவில்...!'

ABOUT THE AUTHOR

...view details