மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினர். இதனால் மகாராஷ்டிர தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றே இறுதி நாளாகும்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்; முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் - மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்
மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லத்திற்குச் சென்று அவரது கால்களில் விழுந்து பட்னாவிஸ் ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் திரண்டுவந்து பாஜகவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.