கூட்டணி கட்சி எம்.எம்.ஏ.க்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
#MAHARASHTRAPOLITICS: மகாராஷ்டிரா அரசியல் நகர்வுகள் நேரலை - மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்

20:06 November 25
19:57 November 25
பாஜகவிற்கு பாடம் புகட்டுவோம் - சரத் பவார்
"அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர் பாஜகவிடம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளார். எனவே, அவரை நீக்கியுள்ளோம். கட்சியின் கொறடாவாக அவர் செயல்படமுடியாது. பாஜகவிற்கு பாடம் புகட்டுவோம். பெரும்பான்மை இல்லாதபோதிலும், பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இது கோவாவோ, மணிப்பூரோ அல்ல" என சரத் பவார் தெரிவித்தார்.
19:53 November 25
அதிகாரத்திற்காக கூடவில்லை - உத்தவ் தாக்கரே
எம்.எல்.ஏ.க்கள் கூடியிருக்கும் அறையில் உத்தவ் தாக்கரே, "அதிகாரத்திற்காக கூடவில்லை, சத்தியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பாஜகவை எதிர்கொண்டு தோற்கடிப்போம். இது ஐந்தாண்டு கூட்டணி அல்ல. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நீடிக்கும்." என தெரிவித்துள்ளார்.
19:50 November 25
நாங்கள் 162!
விடுதியில் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், 'நாங்கள் 162' கொண்ட பதாகைகள் விடுதியில் வைக்கப்பட்டுள்ளது.
19:43 November 25
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் உள்ளிட்ட பல தலைவர்கள் கிராண்ட் ஹயாத் விடுதிக்கு வந்துள்ளனர்.
19:26 November 25
பாஜகவுக்கு எதிராக ஒரே இடத்தில் 162 எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டிய கூட்டணி
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் விடுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
11:54 November 25
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உத்தரவை நாளை காலை 10.30 மணிவரை ஒத்தி வைத்தனர். இதன் காரணமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசுக்கு மேலும் 24 மணி நேரம் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
11:41 November 25
அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர்: நம்பிக்கை வாக்கெடுப்பை 24 மணிநேரத்துக்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என வாதம்.
11:38 November 25
காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் சிங்வி, அஜித் பவார் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் கடிதம் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க அளிக்கப்பட்டதல்ல. சட்டமன்ற கட்சித் தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆதரவு கடிதத்தை அவர்துஷ்பிரயோகம் செய்துள்ளார் என அபிஷேக் சிங்வி வாதம்.
11:34 November 25
காங்கிரஸ் சார்பாக ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, 154 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை பிரமானபத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்குக்கு தொடர்பில்லாததாகக் கூறி பிரமானப் பத்திரத்தை வாங்க மறுத்துவிட்டது. எனவே பிரமானப் பத்திரத்தை திரும்ப பெற்றார் சிங்வி.
11:24 November 25
சிவசேனா சார்பாக வாதாடிய கபில் சிபல், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு அதிகாலை அவசர அவசரமாக ஆளுநர் பதவி பிராமணம் செய்து வைக்க அவசியம் என்ன? சிவசேனா, தேசியவாத காங் கூட்டணியிடம் 154 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு காணொலி மூலம் அவ்வாக்கெடுப்பை கண்காணிக்க வேண்டும் என வாதம்
11:23 November 25
அஜித் பவார் சார்பாக மனீந்தர் சிங் ஆஜர் அஜித் பவார் சார்பில் அளிக்கப்பட்ட ஆதரவு கடிதம் உண்மையானது. அதை வைத்துதான் ஆளுநர் பதவிப்பிரமானம் செய்துவைத்தார். எனவே, இதில் விவாதத்திற்கான தேவையே இல்லை என அஜித் பவார் தரப்பு வாதம்.
11:11 November 25
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாதென துஷார் மேத்தா வாதம். இந்த வாதத்திற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி துஷார் மேத்தா இதுவரை உள்ள நடைமுறைப்படி நம்பிக்கை வாக்கெடுப்பானது 24 மணிநேரத்தில் நடத்தப்பட்டது. பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டுமே தவிர ஆளுநர் மாளிகையில் நடத்தக்கூடாது என நீதிபதி கன்ஹா தெரிவித்தார்.
10:59 November 25
தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகிறார். பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியதால் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெறுவது தாக்கரே, பவார் குடும்பங்களுக்கான அதிகார சண்டை, இதில் அரசுக்கு சம்பந்தமில்லை என ரோத்தகி வாதம்.
10:54 November 25
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சிக்காக ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவு கடிதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 54 தேசியவதாக காங்கிஸ் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் சமர்பித்ததாக வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநர் உத்தரவிட்ட பின் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என துஷார் மேத்தா வாதம்.
10:43 November 25
மகாராஷ்டிரா ஆட்சி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்டுவருகிறார்.
10:42 November 25
சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் தங்களிடம் பெரும்பான்மையுள்ளதாக ஆளுநரிடம் தற்போது கடிதத்தை தந்துள்ளனர்.
10:41 November 25
இந்நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. நேற்றைய விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதத்தை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
10:38 November 25
#MAHARASHTRAPOLITICS: மகாராஷ்டிரா அரசியல் நகர்வுகள் நேரலை
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அம்மாநில அரசியல் குழப்பங்கள் அடுத்தக்கட்டத்தை எட்டின. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் அஜித் பவார் அக்கட்சித் தலைவர் சரத் பவாரின் எண்ணத்துக்கு மாறாக பாஜகவுடன் கைகோர்த்து கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறிவருகிறார்.