நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள வீட்டில் ஜூன் மாதம் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டப்பட்டதாக பலரும் பாலிவுட் மீது குற்றஞ்சாட்டினார்.
இதனை மகாராஷ்டிரா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிகார் மாநில காவல் துறையும் சுஷாந்த் தற்கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் பேசுகையில், ''நடிகர் சுஷாந்த் வழக்கில் தொடர்புடைய அம்சங்கள் பற்றி மகாராஷ்டிரா காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை. அவரின் உயிரிழப்புக்கு இந்தியா முழுவதும் நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சுஷாந்த் வழக்கு பற்றி பிகார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, மகாராஷ்டிரா காவலர்களின் செயல்பாடுகள் மோசமாக இருந்தன. அதற்கு சிவசேனா அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை சுஷாந்துக்கு கொடுத்தாரா ரியா- உடற் பயிற்சியாளர் பகீர் தகவல்