நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தானே மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த கைதிக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பரோலில் வெளி வந்தவுடன், தனது தங்கையை பார்ப்பதற்காக வடா (Wada) பகுதிக்குச் சென்றுள்ளார், அந்த கைதி. பின்னர், மீண்டும் பால்கர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அவரை, உள்ளே அனுமதிக்க கரோனா பரிசோதனை கட்டாயம் என்றனர்.