மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் 24 பெண்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவர்.
அந்த வகையில் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள்...
- மந்தா மாத்ரே (பெலாப்பூர்),
- மணிஷா சவுத்ரி (தஹிசார்),
- வித்யா தாகூர் (கோரேகான்),
- தேவ்யாணி பாரன்டே (நாசிக் சென்ட்ரல்),
- சீமா ஹிரே (நாசிக் மேற்கு),
- மாதுரி மிஷல் (பார்வதி),
- மோனிகா ராஜாலே (சேவ்கான்),
- பாரதி லாவ்கேகர் (வெர்சோவா).
இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைத் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாஜக சார்பில் போட்டியிட்ட 22 பெண்களில் 14 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட 14 பெண்களில் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மூன்று பேர் மீண்டும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர்.அவர்கள்...
- பிரணிதீ ஷிண்டே (சோலாப்பூர் சிட்டி சென்ட்ரல்),
- யாஷோமதி தாகூர் (தியோசா),
- வர்ஷா கெய்க்வாட் (தராவி)