தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பயிர் காப்பீடு தொகையாக 4 ரூபாய் 35 பைசா' காப்பீடு நிறுவனத்தால் அதிர்ச்சியடைந்த விவசாயி..!

மும்பை: அமராவதியில் பிரதான் மந்திரி ஃபஷல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு, காப்பீடு நிறுவனம் பயிர் காப்பீடு தொகையாக 4 ரூபாய் 35 பைசா வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .

விவசாயி
விவசாயி

By

Published : Jul 8, 2020, 10:52 PM IST

பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டமானது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மகசூல் குறைவு ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு பேரூதவி புரியும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்‌. அந்த வகையில், அமராவதியில் பதிவு செய்திருந்த விவசாயிக்கு கிடைத்த பயிர் காப்பீடு தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ரித்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாஹெபிராவ் தலே (70). இவருக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில், கடந்தாண்டு பயிரிடப்பட்ட சோயாபீன், பருத்தி ஆகிய இரண்டிற்கு ரூ.900 காப்பீட்டுக் கொள்கையை எடுத்துள்ளார்.

பயிர் காப்பீடு தொகையாக 4 ரூபாய் 35 பைசா பெற்ற விவசாயி...!

ஆனால், எதிர்ப்பாரத வகையில் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அதீத மழை, பயிர் புழுக்கள், கொறித்துண்ணிகள் ஆகியவற்றால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நிதி நெருக்கடி காரணமாக காப்பீடு நிறுவனத்தை நாட சாஹெபிராவ் முடிவு செய்து அணுகியுள்ளார். அப்போது, அவருக்கு பயிர் காப்பீடு தொகையாக 4 ரூபாய் 35 பைசா வழங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தத் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் விவசாய அமைச்சர் அனில் போண்டே, காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை கேலி செய்துள்ளன என்றும் இவ்விவகாரம் குறித்து ஆய்வு நடத்துமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பதிலளித்த மாவட்ட வேளாண் அலுவலர் விஜய் சாவலே, "காப்பீடு குறைவாக இருந்தாலும், எந்தவொரு விவசாயியும் ரூ.1,000க்கும் குறைவாக காப்பீடு தொகை வழங்குவதில்லை.

இழப்பை கணக்கிட்டு காப்பீடு நிறுவனம் தொகை வழங்கினாலும், மீதமுள்ள தொகையை அரசாங்கம் தான் வழங்குகிறது. தவறான புரிதலால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிச்சயமாக குறைந்தப்பட்சம் ஆயிரம் ரூபாய் காப்பீடு தொகையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details