மகாராஷ்டிரா மாநிலம் துலே (Dhule)மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அவுரங்காபாத்திலிருந்து ஷாஹதா (shahada) பகுதிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது நீம்கல் (Neemgul) கிராமம் வழியாகசென்ற பேருந்து மீது அதிவேகத்தில் எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியதில் விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: 15 பேர் பலி, 35 பேர் படுகாயம் - சாலை விபத்து
மும்பை: அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்து விபத்து
அதில் பேருந்தின் முன்பக்கம் கடும் சேதமடைந்ததால் சம்பவம் இடத்திலேயே பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து துலே மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டுவருகின்றனர்.