மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில ஆளுனர் பகத்சிங் பாஜகவுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், ஹிட்லரின் கடைசி கால நிலை தெரியுமா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சஞ்சய் ராவத், பிரதமர் நரேந்திர மோடியால் ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், பட்னாவிஸால் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க முடியவில்லை. இந்த முறை பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறும். இது பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய தோல்வியாகும்.
இந்த முறை மகாராஷ்டிராவின் முதலமைச்சரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்வார். அரசியல் அச்சுறுத்தலை, அதன் வழிகளை ஹிட்லர் தேடியபோது அவர் மறைந்துவிட்டார். அடிமைத்தனத்தின் மேகங்கள் மறைந்து விட்டன. இதனை நாம் ஏற்றுக் கொள்ளும் நேரமிது. மகாராஷ்ராவில் பாரதிய ஜனதா எந்த வளர்ச்சி திட்டங்களையும் ஏற்படுத்தவில்லை. அதனால்தான் பதவி ஏற்பு விழாவை அமித் ஷா ஒதுக்குகிறார்.
அனைவரும் பழிவாங்குதல் உள்ளிட்ட தந்திர அரசியலை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர். தங்கள் சக்தியால் மற்றவர்களை அச்சுறுத்தியவர்கள் தற்போது பயப்படுகிறார்கள் என்றார்.