தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அனுமதி - மகாராஷ்டிரா அரசு - திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கு அனுமதி - மகாராஷ்டிரா அரசு

மும்பை: சினிமா துறையின் பல்வேறு கட்ட வேண்டுகோள்களுக்கு இணங்க திரைப்படங்கள், சீரியல்களின் படப்பிடிப்பு நடத்த மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மகராஷ்டிரா அரசு திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கு அனுமதி
மகராஷ்டிரா அரசு திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கு அனுமதி

By

Published : Jun 1, 2020, 11:39 AM IST

திரைத்துறையில் பாலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு வைத்த வேண்டுகோள்களுக்கு இணங்க திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள், ஓடிடி உள்ளிட்ட துறைகள் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக படப்பிடிப்பு நடத்த கரோனா தொற்றின் பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவற்றில் உத்தவ் தாக்கரே அரசு ஒரு சில தளர்வுகளை விதித்து படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது.

அதன்படி, முடிந்த வரை, படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடத்தப்பட வேண்டும்; ஒரு மாதம் வரை அங்கு தங்கியிருந்து பணியாற்ற வேண்டும். அதற்கு உதவும் படத்தொகுப்பு, வரைகலை, ஒலித்துறை, கேட்டரிங் இப்படி நெருக்கத்தில் வேலை செய்வோர் போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி, மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:'சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' - அக்ஷய் குமார் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details