மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு பரப்புரை சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கதுக்கு எதிரானவர்களை வரலாறு கணக்கில் கொள்ளும். ரத்து செய்த பிறகு காங்கிரஸ் தலைவர்கள் எவ்விதமான கருத்துக்களை தெரிவித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரானவர்களை வரலாறு கணக்கில் கொள்ளும்' - காஷ்மீர் குறித்து மோடி
மும்பை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரானவர்களை வரலாறு கணக்கில் கொள்ளும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஒருவர் உள்நாட்டு விவகாரம் என கருத்து தெரிவித்தார். இது இந்தியாவை அழித்துவிடும் என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். இந்த மாதிரியான கருத்தை தெரிவிப்பவர்களுக்கு தண்டனை தர வேண்டாமா? நீங்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டும் எனில் என்னிடம் கூறுங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் தன் நலனில் மட்டும் குறிக்கோளாக உள்ளனர். நம் எதிரிகளுக்கு அவர்கள் திட்டம் வகுத்து கொடுக்கிறார்கள்.
சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்எதிர்த்து இருந்தபோதிலும், அக்கட்சியின் பல தலைவர்கள் அதனை வெளியில் ஆதரித்து கருத்து தெரிவித்தனர்" என்றார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைதொடர்பு வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில்தான் அங்கு மீண்டும் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டன.