தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வறட்சி இல்லாத மகாராஷ்டிரா' - பாஜக தேர்தல் அறிக்கை

மும்பை: 'ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, வறட்சி இல்லாத மகாராஷ்டிரா' என்ற வாக்குறுதிகளை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

BJP Manifesto

By

Published : Oct 15, 2019, 6:44 PM IST


மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருகிற 21ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

சங்கல்ப் பத்ரா

கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இந்தத் தேர்தல் அறிக்கை (சங்கல்ப் பத்திரா என்ற உறுதிமொழி பத்திரம்) வெளியானது. அந்தத் தேர்தல் அறிக்கையில், ஒரு கோடி பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வறட்சி இல்லாத மாநிலமாக மகாராஷ்டிரா உருவாக்கப்படும்.

இதையும் படிங்க:பாரதிய ஜனதாவுக்கு ராஜ் தாக்கரே அடுக்கடுக்கான கேள்வி!

மேலும் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு (வீரசாவர்க்கர்) பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.

ஜே.பி. நட்டா பேச்சு

இது குறித்த ஜே.பி. நட்டா கூறும்போது, ”ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்து நிலையற்ற தன்மை காணப்பட்டது. முதலமைச்சர் பதவி என்பது இசை நாற்காலி போன்று இருந்தது. அப்பதவியை தவறாகப் பயன்படுத்தும் தீய அரசியல் நிலவியது. அதனை பாரதிய ஜனதா ஐந்து ஆண்டுகளில் சரிசெய்துவிட்டது” என்றார்.

வறட்சி இல்லாத மகாராஷ்டிரா

தொடர்ந்த பேசிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ”மாநிலத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தபோதிலும் வறட்சியும் காணப்படும். வறட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலம் என்பதே இலக்கு. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மாநிலத்தின் வடக்குப் பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details