மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், புனேவைச் சேர்ந்த 102 வயதான ஹஜி இப்ராஹிம் சலிம் என்ற முதியவர் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்களிப்பதற்காக தனது சிகிச்சையை முடித்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்றார். குடும்பத்தினருடன் வாக்களிப்பதற்காக சென்ற அவர், சுதந்திரம் பெற்றதிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.