இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய மகாராஷ்டிர சமூகநீதி அமைச்சர் - மகாராஷ்டிர சமூகநீதி அமைச்சர்
மும்பை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மகாராஷ்டிரா மாநில சமூகநீதித் துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே, பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தனஞ்செய்
இதனிடையே ஜூன் 12ஆம் தேதி அம்மாநில சமூகநீதித் துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே கரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 நாள்களாகும் நிலையில், தற்போது அவர் பூரணமாக குணமடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வந்தன. இந்நிலையில், இன்று அவர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.