தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா துணை முதலமைச்சருக்கு கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அஜித் பாவர்
அஜித் பாவர்

By

Published : Oct 26, 2020, 12:48 PM IST

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றுவருகிறேன். மருத்துவர்களின் முறையான ஆலோசனை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். சிறிய இடைவேளைக்குப் பின் பணிக்குத் திரும்பிவிடுவேன். எனவே தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மாகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணியில் சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளார்.

நாட்டிலேயே அதிகளவிலான கரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு - முன்னாள் மத்திய அமைச்சருக்கு சிறை!

ABOUT THE AUTHOR

...view details