தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி? களத்தில் மத்திய அமைச்சர் - NCP - BJP alliance

டெல்லி: பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

NCP

By

Published : Nov 22, 2019, 2:48 AM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.

தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற விவகாரத்தில் மாற்று கருத்து தொடங்கியது. இதனால், பாஜக ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை. ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராத காரணத்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு இரண்டு ஆண்டுகள் அளிப்பது குறித்து பாஜகவிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். அவர் ஒரு நல்ல அரசியில்வாதி. இரு கட்சிகளிடையே கூட்டணி அமைந்தால் அதனை முற்றிலுமாக தவிர்த்து விடக் கூடாது. 2014ஆம் ஆண்டு பாஜகவுக்கு அவர் ஆதரவு அளித்தார். தற்போது அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம்" என்றார். இந்நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் நெகிழி பயன்பாட்டுக்கு விரைவில் தடை.!

ABOUT THE AUTHOR

...view details