மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று காரணமாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக முதலமைச்சர் தனது ஆதரவாளர்களையும், கட்சி ஊழியர்களையும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை, ரத்தம், பிளாஸ்மா ஆகியவற்றை நன்கொடையாக வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். அவரது பிறந்த நாள் ஜூலை 27ஆம் தேதியாகும்.
'இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம்' - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
மும்பை: கோவிட் -19 தொற்று காரணமாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மகாராஷ்டிரா சி.எம்.ஓ கூறுகையில், "இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆதரவாளர்கள் மற்றும் கட்சி ஊழியர்களிடம் பேனர்கள், விளம்பர பலகை போன்றவற்றை வைக்க வேண்டாம், அதற்கு பதிலாக ரத்த தானம் மற்றும் பிளாஸ்மா நன்கொடை முகாம்கள் அமைக்கவும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என்று கூறினார்.
மேலும், தற்போது மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 37 ஆயிரத்து 607 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 769 பேர் குணமடைந்துள்ளனர்.