மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி சார்பாக சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 150 தொகுதிகளிலும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் 117 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 146 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காலை 7 மணி முதல் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவு மந்தநிலையில் உள்ளது. பிற்பகல் மூன்று மணிவரை மகாராஷ்டிராவில் 43.14 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கோஷ்டி பூசலுக்குப் பெயர்போன காங்கிரஸ் இந்த முறையும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு பெரும் சவாலை காங்கிரஸ் கூட்டணி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.