தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் நடைபெறும் விறுவிறுப்பான சட்டமன்றத் தேர்தல்! - மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் உள்ள மொத்தம்  288 தொகுதிகளில் 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுகிறது.

Maharashtra Assembly Election 2019- Key Candidates

By

Published : Oct 21, 2019, 9:55 AM IST

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளில் 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதேபோல் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.

இந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 8.9 கோடி தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் சேவை வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 1.17 லட்சம் ஆகும்.

மேலும், பாஜக - சிவசேனா கூட்டணியில் பாஜக 164 வேட்பாளர்களையும், சிவசேனா 124 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 147 வேட்பாளர்களையும், என்சிபி 121 வேட்பாளர்களையும், எம்என்எஸ் 101 வேட்பாளர்களையும், பிஎஸ்பி 262 வேட்பாளர்களையும், விபிஏ 288 வேட்பாளர்களையும், சிபிஐ 16 வேட்பாளர்களையும், சிபிஐ (எம்) 8 வேட்பாளர்களையும், பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 604 வேட்பாளர்களையும், மீதமுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் 1,400 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடக்கும் பணி

முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், நாக்பூர் தென்மேற்குத் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும், வோர்லிஷிவ் தொகுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், யுவசேனா தலைவருமான ஆதித்யா தாக்கரேயும், தெற்கு காரத் தொகுதியில் காங்கிரஸின் பிருத்விராஜ் சவனும் போட்டியிடுகின்றனர். அதேபோல், பாஜகவின் அதுல் சுரேஷ் போசாலும், பாரமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதலமைச்சரான அஜித் அனந்திராவ் பவாரும், பார்லி தொகுதியில் பங்கஜா முண்டேயும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குச்சாவடியின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details