மகாராஷ்டிராவில் லாரி மீது பஸ் மோதி விபத்து; 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு - யவத்மாலில் லாரி விபத்து
08:15 May 19
மும்பை: யவத்மாலில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் இன்று அதிகாலை குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
பேருந்து சோலாப்பூரிலிருந்து ஜார்க்கண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உ.பி.யில் சாலை விபத்து வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு