காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்தார். இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஜோதிராதித்ய சிந்தியாவை வரவேற்று பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ ஒரு ட்வீட்கூட செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ட்விட்டரில், “மகாராஜாவுக்கு அவமானம். மோடி-ஷா நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இதனை செய்ய வேண்டாம். இன்னும் 24 மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள் நீங்கள் அவமானப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள்” என கூறியுள்ளது.