தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில், 'காந்தி சாந்தி யாத்திரை'யை தொடங்கிய சரத் பவார்!

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பையில் காந்தி சாந்தி யாத்திரையை தொடங்கினார்.

Maha top leaders in protest agaisnt CAA and NRC in mumbai
Maha top leaders in protest agaisnt CAA and NRC in mumbai

By

Published : Jan 9, 2020, 3:20 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, காந்தி சாந்தி யாத்திரையை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கிவைத்தார். இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையில் தொடங்கப்பட்டுள்ள இந்த யாத்திரை நிறைவாக 30ஆம் தேதி டெல்லி ராஜ்காட் சென்றடையும்.

சுமார் மூன்றாயிரம் கிலோமீட்டர் பயணிக்கும் இந்த யாத்திரை ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்க உள்ளது. இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரித்வி ராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில், ஜவஹர்லால் நேரு பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் அகதிகளாகக் குடியேறிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நேற்று போராட்டம்! இன்று தீபிகா படத்துக்கு தடை?

ABOUT THE AUTHOR

...view details