மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் சாகேத் நகரி என்ற பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. மாடியிலுள்ள பால்கனியில் குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை கீழே விழுந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "உணவளித்துக் கொண்டிருந்த குழந்தையின் தாய், மீண்டும் உணவை எடுத்து வர சமையலறைக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் குழந்தை பால்கனியின் சுவரில் ஏறியுள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் குழந்தை சாலையில் விழுந்தது.