இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி ஒருவரை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை! - பழங்குடியினச் சிறுமி பாலியல் வன்கொடுமை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பால்கர் மாவட்டத்தில் மனோர் பகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி 16 வயது பழங்குடியின சிறுமி ஒருவர், தனது கால்நடைகளுடன் வயல் வெளியில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை செய்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை தேடி வருகின்றனர்.