மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித் துறை, திட்டத் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.