மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையை அடுத்த, நாவி மும்பைப் பகுதியில் நேற்று பாஜக மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, "(உத்தவ் தாக்ரே தலைமையிலான) மகாராஷ்டிரா அரசு இயற்கைக்கு மாறானது. நம்பத்தகாதது. அடுத்து வரும் தேர்தல்களில் நாம் தனித்துப் போட்டியிட ஆயத்தமாக வேண்டும்" என்றார்.
கடந்த அக்டோபர் மாதம், மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி பெருவாரியான தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கவிருந்தது.
இதனிடையே, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட சகப்பான கருத்து வேறுபாடு காரணமாக, சிவசேனா கட்சி கூட்டணியில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது.
பின்னர், அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியமைத்தது.
சிவசேனா கட்சி சித்தாந்த ரீதியில் முற்றிலும் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிகள் அமைத்து அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எழுவர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார் - அற்புதம்மாள் நம்பிக்கை!