தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிர அரசு நிலையாக உள்ளது - தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிர அரசு குறித்து நவாப் மாலிக்

மும்பை: மகாராஷ்டிர அரசு தற்போது வலுவாக இருக்கிறது என்றும் இந்தக் கூட்டணி கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Nawab Malik
Nawab Malik

By

Published : May 28, 2020, 1:52 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

கொள்கை ரீதியாக பல்வேறு முரண்களைக் கொண்ட இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளதால், இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று பாஜக விமர்சித்தது. அதற்குப் பதிலளித்துள்ள அம்மாநிலத்தின் சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நவாப் மாலிக், இந்தக் கூட்டணி கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரியும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த அரசு பொறுப்பேற்று தற்போது மாதங்கள் நிறைவடைந்துள்ளது. மகாராஷ்டிர அரசு நிலையானதாகவும் வலுவானதாகவும் உள்ளது. இந்த அரசு சிறிது காலம் மட்டுமே நீடிக்கும் என்று பாஜக விமர்சித்துவருகிறது. ஆனால் இந்தக் கூட்டணி கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரியும். அவர்கள் (பாஜக) கூறுவதால் மட்டுமே இந்த ஆட்சி கலைந்துவிடாது" என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் மகாராஷ்டிர ஆளுநர் பி.எஸ். கோஷ்யரியை சந்தித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண் ரானே, மாநிலத்தில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் மகாராஷ்டிர அரசை கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details