மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பட்னாபூர் நகரத்தின் ஒரு குடிமை அமைப்பு, நெகிழி கழிவுகளின் அபாயங்கள் குறித்து குழந்தைகளை ஈடுபடுத்தி கல்வி கற்பிக்கும் நோக்கில் 'கரி சாத்வா, ஷாலெட் பாத்வா' (அதை வீட்டில் சேமித்து, பள்ளிக்கு அனுப்புங்கள்) என்ற புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மேலும், இந்த முயற்சியால் நெகிழி பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. மாணவர்கள் பயன்படுத்தப்படாத அனைத்து நெகிழிப் பொருட்களையும் வீட்டிலிருந்து கொண்டு வந்து பள்ளியில் சேகரிக்கின்றனர்.
பத்னாபூர் நகராட்சியில் இருந்து ஒரு வாகனம் நெகிழி கழிவுகளை சேகரிக்கும் தேதியை பள்ளிகள் நிர்ணயித்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் பல பள்ளிகள் பங்கேற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் வெறும் நான்கு மாதங்களில் 500 குவிண்டால் நெகிழி கழிவுகளை சேகரித்துள்ளன என்று பத்னாபூர் நகர் பஞ்சாயத்து தலைமை அலுவலர் டாக்டர் பல்லவி அம்போர் ஈடிவி பாரதத்திடம் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், "அகமத் நகருக்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலைக்கு கழிவுகளை பிரிப்பதற்கான செலவினங்களைக் குறைக்க குடிமை அமைப்பு உதவியது. மாணவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், பத்னாபூர் காவல் ஆய்வாளர் கெதேக்கர் மாணவர்களுக்கு அவர்களின் உற்சாகத்தைத் தூண்டுவதற்காக ஆய்வுப் பொருட்கள் மற்றும் சிறிய வெகுமதிகளை வழங்கினார்” என்றார்.
இதையும் படிங்க:'ரூ.4 கோடி செலவில் மரங்கள்'- ட்ரம்பை வரவேற்க தயாராகும் குஜராத்