மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதனால், அரசு மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மும்பை, நேவி மும்பை, புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாக்பூர் நகரங்களில் உள்ள தியேட்டர், ஜிம்கள், நீச்சல் குளங்கள், மால்களை இன்று நள்ளிரவு முதல் மூடுவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இதை அதிகாரப்பூர்வமாக மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும், அவர் கூறுகையில் ,"1897ஆம் ஆண்டின் தொற்று நோய்கள் அவசர சட்டத்தை, இன்று நள்ளிரவு முதல் செயல்படுத்துகிறோம்.