மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மகாராஷ்டிராவிற்கு சென்றது. இந்நிலையில், இன்று அகோலா மாவட்டத்தில் இருவர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்! - கனமழை
மும்பை: மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரம் காட்டுவருகிறது.
![மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4095368-thumbnail-3x2-maha.jpg)
Maharashtra
வெள்ளத்தில் மூழ்கிய மகாராஷ்டிரா
வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்த கோலாபூர் மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்க 14 கடற்படை குழுக்கள் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதிய தொகையை வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.