மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வாஷியைச் சேர்ந்தவர்கள் சிலர் கோவாவுக்கு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர். புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அம்ப்ராஜில் பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு - ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
மும்பை: புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அருகே ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது காரத் நகரத்திற்கு அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் உஷா (40), மதுசூதன் (42), ஆதித்யா (23), சஜன்(35), ஆரவ் (3) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.