மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி அருகேயுள்ள பம்ராகத் பகுதியைச் சேர்ந்தவர் தீபக்குமார் (30). இவர் மத்திய ஆயுத காவல் படை வீரராக (சி.ஆர்.பி.எஃப்) 37வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தீபக் நேற்று தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.