தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூளைக் காய்ச்சல் விவகாரம்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக விசாரணை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

பாட்னா: மூளைக் காய்ச்சல் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பிகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் அலட்சியம் காட்டினார்களா என்று விசாரணை நடத்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

harshvardhan

By

Published : Jun 24, 2019, 3:17 PM IST

பிகாரில் பரவிவரும் மூளைக் காய்ச்சல் விவகாரம் இந்தியா முழுவதையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மூளைக் காய்ச்சலால் இதுவரை முசாஃபர்பூரில் மட்டும் 130 குழந்தைகள் உயிரிந்துவிட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மூளைக் காய்ச்சல் தொடர்பான பொது நல வழக்கினை உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்க உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் மூளைக் காய்ச்சல் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டார்களா என்பதை விசாரிக்க முசாஃபர்பூர் மாவட்ட தலைமை நீதிபதி சூர்யாகாந்த் திவாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details